search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலை குறைப்பு"

    மானியம் இல்லா சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.120.50 குறைக்கப்பட்டுள்ளது என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. #LPG #PriceCut
    புதுடெல்லி:

    மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு விலைக்கு ஏற்ப அவ்வப்போது உயர்த்தியும், குறைத்தும் வருகின்றன.

    இந்நிலையில், மானியத்துடன் விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டருக்கு ரூ. 5.91 குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் இன்று அறிவித்துள்ளன. 

    இதேபோல், மானியம் இல்லா சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.120.50 குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

    இந்த மாதத்தில் 2-வது முறையாக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த டிசம்பர் 1-ம் தேதி மானியத்துடன் கூடிய சிலிண்டர் விலை ரூ.6.52- குறைக்கப்பட்டது.

    ஜூன் மாதத்தில் இருந்து தொடர்ந்து 6 மாதமாக அதிகரித்து வந்த சிலிண்டர் விலை, இந்த மாதத்தில் இருமுறை குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #LPG #PriceCut
    சமையல் கியாஸ் சிலிண்டர் விலை இன்று 6.52 ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. #LPG #Cylinder
    புதுடெல்லி:

    வீட்டு உபயோகத்துக்கு ஆண்டுக்கு, 14.2 கிலோ எடையுள்ள 12 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இந்த சிலிண்டர்களை சந்தை விலையில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, மானிய தொகை அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
     
    இந்நிலையில், வீட்டு உபயோகத்துக்கு மானிய விலையில் வழங்கப்படும் 14.2 கிலோ சிலிண்டருக்கான விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இன்று 6.52 ரூபாய் குறைத்துள்ளன. இதேபோல், மானியமில்லாத சிலிண்டர் விலை 133 ரூபாய் குறைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை டெல்லியில் ரூ.500.90க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜூன் மாதத்தில் இருந்து 6 மாதங்கள் தொடர்ச்சியாக விலை உயர்த்தப்பட்ட நிலையில் இப்போது குறைந்துள்ளது. இந்த விலை குறைப்புக்கு முன்னதாக, சிலிண்டருக்கு ரூபாய் 14.13 ஆக உயர்ந்து இருந்தது. இப்போதைய விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

    உள்ளூர் வரிகள் மற்றும் போக்குவரத்து செலவை பொறுத்து இந்த விலையில் சிறிது மாற்றம் இருக்கும். இதுபற்றிய அறிவிப்பை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு உள்ளன. #LPG #Cylinder
    பெட்ரோல் டீசல் விலை தினமும் உயர்ந்து வரும் நிலையில் மேகாலயாவில் லிட்டருக்கு 2.50 ரூபாய் குறைக்கப்படும் என முதல் மந்திரி பிரெஸ்டோன் டின்சாங் அறிவித்துள்ளார். #PetrolDieselPrice #Meghalaya
    ஷில்லாங்:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. எப்போதும் இல்லாத அளவில் பெட்ரோல், டீசல் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

    பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். கடந்த 10-ந் தேதி நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    இதற்கிடையே, மத்திய அரசு கடந்த வாரம் 2.50 ரூபாயை குறைத்து உத்தரவிட்டுள்ளது. எனவே, பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் டீசல் மீதான வரியைக் குறைத்து விலையைக் குறைத்தன. 

    இந்நிலையில், மேகாலயா மாநிலத்தில் பெட்ரோல் டீசல் மீதான விலை 2.50 ரூபாய் குறைக்கப்படுவதற்கு அந்த மாநில சட்டசபையில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
     
    ஏற்கனவே, ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்கத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #PetrolDieselPrice #Meghalaya
    நிதி மந்திரி பியுஷ் கோயல் தலைமையில் நேற்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. #GST #GSTCouncil
    புதுடெல்லி:

    நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தமாக கருதப்படும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த வருடம் ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதன்மூலம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படையில் விதிக்கப்படுகிறது. 

    இந்நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குழுவின் 28-வது கூட்டம் டெல்லியில் மத்திய (இடைக்கால) நிதி மந்திரி பியுஷ் கோயல் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநிலங்களை சேர்ந்த நிதி மந்திரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் 46 திருத்தங்களுடன் பல்வேறு பொருட்களுக்கு  வரிவிதிப்பில் சலுகை அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விபரங்களை கீழே பார்க்கலாம்:-

    முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள்:

    பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்கள் (12 சதவிகித வரி தற்போது உள்ளது),  முதியோர் இல்லங்களில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், பளிங்கு, மரம் மற்றும் கற்களால் செய்த சாமி சிலைகள், தங்கத்திலான மற்றும் நவரத்தின கற்கள் பதிக்கப்படாத ராக்கி கயிறுகள்

    28 சதவிகித வரியில் இருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்ட பொருட்கள்:

    ஏ.சி., பிரிட்ஜ், வாட்டர் ஹீட்டர்கள், வாஷிங் மெஷின், டிவி (68 செ.மீ வரை), வாக்யூம் கிளீனர்ஸ், பெயிண்டுகள், முடி திருத்தும் கருவி, முடி உலர்த்தும் கருவி, பாடி செண்ட் மற்றும் ஸ்பிரேக்கள், லித்தியம் இயான் பேட்டரிகள், குளியலறை ஸ்பிரே, டிரைலர்கள் மற்றும் வீடியோ கேம்ஸ் சாதனங்கள்.

    18 சதவிகித வரியில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்கப்பட்ட பொருட்கள்:

    பர்சுகள், நகைப்பெட்டிகள், ஹேண்ட் பேக்குகள், கண்ணாடி மற்றும் புகைப்பட பிரேம்கள், அலங்கார பிரேம்கள், மண்ணெணை அடுப்பு, இரும்பு அலங்கார பொருட்கள்.

    5 சதவிகித வரிக்கு கொண்டு வரப்பட்ட பொருட்கள்:

    யூரியா உரம், எத்தனால், திட உயிரி எரிபொருள் குண்டுகள், கையால் நெய்யப்பட்ட தரை விரிப்புகள், கையால் தயாரிக்கப்பட்ட சவுரி முடிகள், கோரைப்புற்களை கொண்டு கையால் தயாரிக்கப்பட்ட பொருட்கள்.

    இந்த அம்சங்கள் யாவும் வரும் 27-ம் தேதி முதல்அமலுக்கு வரும் என நிதி மந்திரி பியுஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார். 
    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 7-வது நாளாக சரிவை சந்தித்த நிலையில் நேற்று 14 காசு குறைந்து ரூ.80.80க்கு விலை குறைக்கப்பட்டது. #Petrol #Diesel
    புதுடெல்லி:

    ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது இறங்குமுகமாக உள்ளது.

    சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.80.94 ஆகும். நேற்று 14 காசு குறைந்து இது ரூ.80.80 ஆனது.

    இதே போன்று நேற்று முன்தினம் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ. 72.82-க்கு விற்பனையானது. நேற்று இது 10 காசு சரிந்து ரூ.72.72 ஆனது.

    நேற்று பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 7-வது நாளாக சரிவை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலைச்சரிவு அமைந்து உள்ளது. 
    ×